ஏசி & எல்இடி விளக்குகள் பிஎல்ஐ திட்டத்திற்கான விண்ணப்பம்..! 30 நாள் தான் டைம்… மத்திய அரசு அறிவிப்பு…!

PLI scheme 2025

ஏசி மற்றும் எல்இடி விளக்குகள் பிஎல்ஐ திட்டத்திற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 15, 2025 முதல் 30 நாட்களுக்கு வரவேற்கப்படுகின்றன.


இது குறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் இந்தியாவில் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் எல்இடி விளக்குகளின் முக்கிய பாகங்களை உற்பத்தி செய்வதால் உருவாகும் வளர்ந்து வரும் சந்தை மற்றும் நம்பிக்கையின் விளைவாக, இந்தத் திட்டத்தின் கீழ் அதிக முதலீடு செய்ய தொழில்துறையின் ஆர்வத்தின் அடிப்படையில், இந்தப் பொருட்களுக்கான பிஎல்ஐ திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் வரவேற்கப்படுகிறது.

16.04.2021 அன்று அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் அவ்வப்போது திருத்தப்பட்டு 04.06.2021 அன்று வெளியிடப்பட்ட இத்திட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வலவேற்கப்படுகின்றன. இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 15, 2025 முதல் அக்டோபர் 14, 2025 வரை (இரண்டு தேதிகளும் உட்பட) https://pliwg.dpiit.gov.in/ என்ற தளத்தில் வரவேற்கப்படுகின்றன. அதன் பிறகு எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Vignesh

Next Post

உங்களுக்கு திடீரென வழுக்கை விழுகிறதா?. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்!. மருத்துவர்கள் எச்சரிக்கை!

Mon Sep 15 , 2025
திடீர் வழுக்கை என்பது அழகு பிரச்சனை மட்டுமல்ல, அது மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். முடி உதிர்தலுக்கும் இதயத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ளுங்கள். பலர் திடீர் வழுக்கை பற்றி கவலைப்படுகிறார்கள் , அதை ஒரு அழகு பிரச்சனையாக மட்டுமே கருதி புறக்கணிக்கிறார்கள் . ஆனால் திடீர் வழுக்கை உங்கள் இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பது உங்களுக்குத் தெரியுமா? முடி உதிர்தலுக்கும் மாரடைப்புக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். […]
hair loss

You May Like