3 வேலை இலவச உணவு + 7 நாள் பயிற்சி…! தொழிலாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…! உடனே பதிவு செய்ய வேண்டும்…!

house tn govt 2025

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து அந்தந்த மாவட்டத்திலேயே 7 நாட்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மேசன், கார்பெண்டர், கம்பிவேலை, தச்சு வேலை, மின் பணியாளர் வேலை. பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏ.சி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் போன்ற தொழில் இனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சித்தாள், கூலியாள் உள்ளிட்ட 12 தொழில் பிரிவுகளின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தருமபுரியில் உள்ள கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கி வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

பயிற்சியில் பங்குபெறும் தொழிலாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் கட்டணமில்லாமல் மதிய உணவு. காலை மாலை சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடிவுற்றதும் ஊதியமாக ரூ.5600 (ரூபாய் ஐந்தாயிரத்து அறுநூறு) தொழிலாளர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பதிவு பெற்ற தொழிலாளர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தினை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Vignesh

Next Post

அடங்காத ஆசை..!! பக்கத்து வீட்டு வாலிபருடன் கள்ளத்தொடர்பு..!! உல்லாசத்தால் கர்ப்பமான ஆண்ட்டி..!! குளத்தில் மிதந்த குழந்தை..!! குமரியில் ஷாக்

Tue Sep 16 , 2025
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே சம்ப குளத்தில் கடந்த செப்.11ஆம் தேதி ஒரு பச்சிளம் குழந்தையின் சடலம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ராஜாககமங்கலம் போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தவறான உறவில் பிறந்த குழந்தைதான் இது என்ற […]
Sex 2025 5

You May Like