விமானத்தில் ஏறியவுடன், “உங்கள் மொபைலை ஏரோபிளேன் மோடில் போடுங்கள்” என்ற அறிவிப்பை ஒவ்வொருவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை பின்பற்றாவிட்டால் உண்மையில் என்ன ஆகும்? என்ற கேள்விக்கு, ஒரு விமானி தனது வீடியோவில் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
நீங்கள் போனை ஏரோபிளேன் மோடில் போடவில்லை என்றால் விமானம் கீழே விழாது. விமான சிஸ்டத்திலும் பெரிய பிரச்சனை ஏற்படாது. ஆனால், மொபைல் போன் சிக்னல்கள் விமானிகள் பயன்படுத்தும் ஹெட்செட்டுகளில் குறுக்கிடக்கூடும். குறிப்பாக 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்கும் விமானத்தில், சிலர் போன்களை ஆஃப் செய்யாவிட்டால், வரும் ரேடியோ அலைகள் விமானிகளின் ஹெட்செட்டில் சத்தம் (buzzing sound) உண்டாக்கும். இது பாதுகாப்பான தரையிறக்கத்தில் சிறிய சிரமங்களை ஏற்படுத்தும்.
ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
* மொபைல் போன் தொடர்ந்து செல்லுலார் சிக்னல் தேடிக்கொண்டே இருக்கும். இதனால் பேட்டரி வேகமாக காலியாகும்.
* விமான நிறுவனங்கள் பாதுகாப்பு காரணமாகவே இந்த விதியை கடுமையாக பின்பற்றச் செய்கின்றன.
* போன் குறுக்கீடுகள் காரணமாக நேரடி விபத்து நடந்ததில்லை, ஆனால் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
இதுவரை மொபைல் குறுக்கீடு காரணமாக நேரடியாக எந்த விமான விபத்தும் நடைபெறவில்லை. இருப்பினும், இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதால், விமான நிறுவனங்கள் இந்த விதியை கடுமையாக பின்பற்றச் செய்கின்றன.



