PF நிதி என்பது ஊழியர் மற்றும் முதலாளியின் மாதாந்திர பங்களிப்புகளால் உருவாகும், அரசு ஆதரவு கொண்ட நீண்டகால சேமிப்பு திட்டம். இந்த நிதி வருடாந்திர வட்டியுடன் வளர்ந்து, எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும். பணியின்மை, நோய் அல்லது அவசர நிலைகளில் PF நிதி நன்மை வழங்கும் என்பதால், உங்கள் PF இருப்பைக் கவனமாக கண்காணித்து தேவையான அனைத்து இணக்கங்களையும் சரி செய்வது அவசியம். இது வேலை மாற்றம் போன்ற சூழ்நிலைகளில் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
அதனை மேலும் எளிதாக அணுக அரசு பல விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இணையதளம் செயலிழந்தாலும், SMS மற்றும் மிஸ்ட்-கால் சேவைகள் மூலம் PF இருப்பை எப்போதும் சரிபார்க்கலாம்.
SMS மூலம் இருப்பைச் சரிபார்த்தல்: EPFO உறுப்பினர்கள் தங்கள் PF இருப்பை SMS மூலம் விரைவாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு உங்கள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) தேவை. UAN என்பது 12 இலக்க தனித்துவ உறுப்பினர் எண், இது EPFO வழங்கியதாகும் மற்றும் சம்பளச் சீட்டில் காணப்படுகிறது.
SMS மூலம் தகவல் பெற, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு குறுஞ்ச்செய்தியை அனுப்ப வேண்டும். இந்த சேவையின் இயல்புநிலை மொழி ஆங்கிலம், ஆனால் தேவையானவர்களுக்கு ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி போன்ற ஒன்பது மொழிகளிலும் PF தகவலை பெற முடியும். இதன் மூலம், சமீபத்திய பங்களிப்பு மற்றும் PF இருப்பை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
PF இருப்பை மிஸ்டு-கால் மூலம் சரிபார்ப்பது:
* முதலில், உங்கள் UAN உடன் மொபைல் எண் EPFO போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* குறைந்தபட்சம் ஒரு KYC (வங்கி கணக்கு, ஆதார் அல்லது PAN) உங்கள் UAN-க்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு-கால் கொடுங்கள்.
* இரண்டு முறை அழைப்பு வந்த பிறகு, அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும்.
* சில நிமிடங்களில், உங்கள் சமீபத்திய PF பங்களிப்பு மற்றும் PF இருப்பு விவரங்கள் SMS மூலம் பெறுவீர்கள்.
* இந்த சேவை EPFO உறுப்பினர்களுக்கு இலவசம்.