தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.. தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் ரஜினி தனது 74 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிசியாக நடிகராக வலம் வருகிறார்.. அந்த வகையில் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் கூலி படம் வெளியானது.. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் வெற்றிப் படமாகவே அமைந்தது.. இந்த படம் இதுவரை சுமார் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கூலி படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக சென்னை விமான நிலையம் சென்றார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி “ ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்களுக்கும் சேர்ந்து ஒரு படம் நடிக்கப் போகிறேன்.. இன்னும் இயக்குனர் முடிவாகவில்லை.. கமலுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை.. கதை, கதாப்பாத்திரம் கிடைக்கணும்.. கிடைத்தால் நடிப்பேன்..” என்று தெரிவித்தார்..
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என ரஜினிகாந்த் பதிலளித்தார்.. திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமாக என்ற கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என்று பதிலளித்து ரஜினி சென்றுவிட்டார்.
மேலும் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கோவைக்கு சென்றுள்ளதாகவும், 6 நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்றும் ரஜினி கூறினார்.. ஜெயிலர் 2 படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்..