கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் சட்டப்பூர்வ கடமை என மதுரை உயர்நீதிமன்ற கிளை வலியுறுத்தியுள்ளது. விருதுநகர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலைச் சார்ந்த வழக்கில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒரு பொதுநல மனு (PIL) மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவம் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. கோயிலுக்கு வரும் வருவாய் முறையாக பயன்படுத்தப்படவில்லை. கழிப்பறைகள், வளாகம் பராமரிப்பு இல்லை. வணிக வளாகம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கோயிலின் அருகிலுள்ள நீர்நிலைகள், பொதுப்பாதைகள் கூட ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரியா கிளீட் ஆகியோர் “கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பது என்பது அறநிலையத் துறை அதிகாரிகளின் சட்டப்பூர்வ கடமை” என்று தெளிவுபடுத்தினர். மதுரை அறநிலையத்துறை இணை கமிஷனர் ஏற்கனவே, “ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டது” என்று அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதனால், புதிய உத்தரவு தேவையில்லை எனக் கூறி வழக்கை பைசல் செய்துவிட்டனர்.
Read more: 50 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் திரிகிரஹி யோகம்! பணத்தை கட்டு கட்டாக அள்ளப்போகும் 3 ராசிகள்!



