Wow! 2.5 மில்லியன் படங்களில் 2 விந்தணுக்களை கண்டுபிடித்த AI..! 19 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோர் ஆன தம்பதி!

pregnancy jpg 1

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிரடி முன்னேற்றமாக, ஒரு ஆல்கோரிதம் சமீபத்தில் ஒரு விந்து மாதிரியின் 25 லட்சம் படங்களை 2 மணிநேரத்தில் ஸ்கேன் செய்து, உயிர் வாழும் இரண்டு விந்தணுக்களை (sperm cells) கண்டறிந்தது. இந்த கண்டுபிடிப்பு, 19 ஆண்டுகளாக குழந்தை பெற முடியாமல் தவித்த ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறக்க வழிவகுத்தது என்று The Lancet இதழ் தெரிவித்துள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த இந்த தம்பதியில், கணவன் 39 வயது, மனைவி 37 வயது. இருவரும் இதற்கு முன்பு பல IVF முயற்சிகளையும், அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டிருந்தாலும், வெற்றி பெறவில்லை.

அசோஸ்பெர்மியா (Azoospermia) பிரச்சனை

அசோஸ்பெர்மியா எனப்படும் நிலையால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களில் மிகக் குறைவான அல்லது எவ்வித விந்தணுவும் இல்லாத நிலை காணப்படும். இவர்கள் பெரும்பாலும் விரைகளில் இருந்து (testes) நேரடியாக விந்தணுக்களை எடுக்கும் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும்.. ஆனால் இது பல நேரங்களில் தோல்வியடைவதுடன், ரத்த நாளங்களில் சேதம் அல்லது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைதல் போன்ற பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.

“பல தம்பதிகளுக்கு, ஆண் பக்க மலட்டுத்தன்மை காரணமாக உயிரியல் குழந்தை பெற வாய்ப்பு குறைவு,” என கொலம்பியா பல்கலைக்கழக பண்ணின்மை ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜெவ் வில்லியம்ஸ் (Zev Williams) தெரிவித்தார்.

AI தொழில்நுட்பம்: ‘STAR’ முறை

ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய புதிய AI முறைமைக்கு “Sperm Tracking and Recovery (STAR)” என்று பெயரிடப்பட்டது.. இது முன்பு அசோஸ்பெர்மியா என வகைப்படுத்தப்பட்ட மாதிரிகளில் இருந்து அரிய விந்தணுக்களை அடையாளம் காண உதவுகிறது.

உயர் திறன் கொண்ட படமெடுக்கும் தொழில்நுட்பம் ஒரு வீர்ய மாதிரியில் ஒரு மணி நேரத்திற்குள் எட்டு மில்லியன் படங்கள் வரை பதிவு செய்கிறது. அதிலிருந்து AI, விந்தணுக்களை கண்டறிகிறது. சிறிய அளவிலான ஒரு மைக்ரோசிப், அந்த விந்தணுக்கள் உள்ள பகுதியை பிரிக்கிறது. பின்னர், ரோபோ முறைமை அந்த விந்தணுவை எடுத்துக் கொண்டு கருவுறுத்தலுக்கோ அல்லது சேமிப்புக்கோ பயன்படுத்துகிறது.

“சாதாரணமாக ஒரு விந்தணூ மாதிரி நன்றாகவே தோன்றலாம்; ஆனால் நுண்ணோக்கியில் பார்த்தால், செல்லுகளின் குப்பைகளாக மட்டுமே காணப்படும், எந்த விந்தணுவும் தென்படாது,” என வில்லியம்ஸ் விளக்கினார்.

19 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகரமான கர்ப்பம்

STAR முறைமை சுமார் 2.5 மில்லியன் படங்களை 2 மணிநேரத்தில் பகுப்பாய்வு செய்து, மொத்தம் ஏழு விந்தணுக்களை கண்டறிந்தது — அதில் இரண்டு இயங்கும் (motile), ஐந்து இயங்காத (non-motile).

இயங்கும் 2 விந்தணுக்களை இரண்டு முழுவளர்ச்சி பெற்ற முட்டைகளில் (oocytes) ஊசி மூலம் செலுத்தி, அவை கருக்களாக உருவாகின. மூன்றாம் நாளில் இந்த கருக்கள் பெண்ணின் கருப்பையில் மாற்றப்பட்டன. 13 நாட்களுக்கு பிறகு, அவர் முதல் முறையாக கர்ப்பம் உறுதியானது.

8-வது வார கர்ப்ப பரிசோதனையில், 172 துடிப்புகள்/நிமிடம் கொண்ட சாதாரண குழந்தை இதயத் துடிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது, STAR முறைமையின் திறனை பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகள் மூலம் மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த புதுமையான செயற்கை நுண்ணறிவு முயற்சி, ஆண் மலட்டுத்தன்மை பிரச்சனைக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தம்பதியருக்கு புதிய நம்பிக்கை அளிக்கிறது.

Read More : வரலாறு படைத்த இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானி..! நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் முஸ்லிம்..!

RUPA

Next Post

FLASH | பொதுக்குழுவுக்கு என்ட்ரி கொடுக்கும்போதே விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்..!! கண்முன்னே தவெக கொடிகள், பேனர்கள் கிழிப்பு..!!

Wed Nov 5 , 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெறவுள்ள நிலையில், நிகழ்விடத்திற்கு வருகை தந்த தலைவர் விஜய்க்கு காவல்துறையின் திடீர் நடவடிக்கையால் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்குக் காரில் வருகை தந்த விஜய், அங்கு கட்சி நிர்வாகிகளால் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் கொடிகளைப் போலீசார் அகற்றிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைப் பார்த்த […]
TVK Vijay new

You May Like