பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

college admission 2025

நவம்​பர் மாதம் நடை​பெற உள்ள பாலிடெக்​னிக் செமஸ்​டர் தேர்​வுக்கு கட்டணம் செலுத்​த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு பொறியியல் டிப்ளமா படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன.‘நவம்​பர் மாதம் நடை​பெற உள்ள பாலிடெக்​னிக் தேர்​வுக்கு எந்த வித​மான அபராத கட்​ட​ண​மும் செலுத்​தாமல் செப்​டம்பர் 20-ம் தேதி வரை​யும், ரூ.150 அபராத கட்​ட​ணம் செலுத்தி செப்​டம்பர் 21 முதல் 27-ம் தேதி வரை​யும், அபராத கட்​ட​ணம் ரூ.750 செலுத்தி செப்​டம்பர் 28 முதல் அக்டோபர் ​6-ம் தேதி வரை​யும் விண்​ணப்​பிக்​கலாம்.

முதல் செமஸ்டர் தவிர மற்ற அனைத்து செமஸ்டர் மாணவர்களுக்கும் கடைசி வேலை நாள் அக்டோபர் 3 என்பதற்கு பதிலாக, அக்டோபர் 17 என மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தில் செமஸ்டர் தேர்வுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு விரிவான அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கிம் ஜாங் உன்னின் சர்வாதிகாரம்!. நாட்டில் அதிகரித்த மரண தண்டனை!. ஐ.நா. அறிக்கையால் கொந்தளிப்பு!

Thu Sep 18 , 2025
வட கொரியாவில் சட்டங்கள் மிகவும் கடுமையாகிவிட்டதால் அது உலகிலேயே மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டு நாடாக மாறியுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சர்வாதிகாரம் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டதாகும். அவரது அசாதாரண மற்றும் கடுமையான முடிவுகள் பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகின்றன. வட கொரிய மக்களுக்கு எதிரான அவரது அட்டூழியங்களை விவரிக்கும் மற்றொரு அறிக்கை வெளியாகியுள்ளது. தென் […]
kim jong un

You May Like