காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பண்ணை சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு காளான் விதை உற்பத்தி ததொகுப்பு அமைத்திட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் ஒரு காளான் விதை உற்பத்தி தாெகுப்பு அமைக்க விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம். தனிநபராகவோ (குழு உறுப்பினர்) அல்லது குழுவாகவோ ஏற்கனவே காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் அவர்களின் 2025-2026 ஆம் ஆண்டு செயல்திட்டத்தில், சேலம் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் Liecht smocar சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ஒரு காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மகளிர் சுய தவிக்குழு விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுய உதவிக்குழு உறுப்பினராக செயல்பட்டு வர வேண்டும். தனிநபராகவோ குழு உறுப்பினர்) அல்லது குழுவாகவோ ஏற்கனவே காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்படி விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.