உங்கள் வேண்டுதல் அப்படியே நிறைவேற முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க..!! இந்த 3 பூக்கள் போதும்..!!

Murugan 2025

கலியுகத்தின் தெய்வமாகப் போற்றப்படும் முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறாதபோது வருத்தம் கொள்வதுண்டு. ஆனால், இதற்கு ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த வழிபாட்டு முறை இருக்கிறது. அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


இந்த வழிபாட்டை, முருகனுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை அல்லது சஷ்டி திதியில் செய்யலாம். முடிந்தால், தொடர்ந்து 6 வாரங்களுக்கு இந்த வழிபாட்டை செய்வது சிறந்த பலன்களைத் தரும்.

வழிபாட்டுக்கு தேவையானவை :

* மல்லிகைப்பூ

* செவ்வரளிப் பூ

* சில்லறை நாணயங்கள்

மல்லிகை மற்றும் செவ்வரளிப் பூக்களை ஒன்றாக கலந்து, ஒரு கைப்பிடி அளவு சில்லறை நாணயங்களுடன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

வழிபாட்டு முறை :

கோவிலில் உள்ள அர்ச்சகரிடம் இந்த 3 பொருட்களையும் கொடுத்து, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய சொல்ல வேண்டும். அர்ச்சனை செய்யும் போது, உங்கள் வேண்டுதலை மனமுருகி சொல்ல வேண்டும். அர்ச்சனைக்குப் பிறகு நாணயங்களை திருப்பிக் கொடுத்தால், அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைத்துக்கொள்ளலாம். திருப்பிக் கொடுக்காவிட்டால், அதை முருகனுக்குரியது என்று நினைத்து முழு மனதுடன் வழிபட வேண்டும்.

தொடர்ந்து 6 வாரங்கள் இதே முறையில் அர்ச்சனை செய்து வர வேண்டும். 6-வது வாரம், உங்கள் வசதிக்கேற்ப ஏதேனும் ஒரு பிரசாதத்தை தயார் செய்து முருகனுக்குப் படைத்து, அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்பவர்களின் வேண்டுதல்கள் விரைவிலேயே நிறைவேறும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் நடைபெறுவதற்கான வழிகள் திறக்கும். இது, நம் கர்ம வினைகளையும் தாண்டி, முருகனின் அருளைப் பெற உதவும் ஒரு சூட்சுமமான வழிபாடு ஆகும்.

Read More : நாக தோஷம், திருமணத் தடையை நீக்கும் அலங்கார செல்வி அம்மன்.. ஒரு முறை சென்று பாருங்கள்..!

CHELLA

Next Post

காலை உணவாக பிரட் சாப்பிடுவது இத்தனை பிரச்சனைகளை உண்டாக்குமா..? மருத்துவர்கள் வார்னிங்..

Fri Sep 19 , 2025
Can eating bread for breakfast cause so many problems? Doctors warn..
bread 2

You May Like