விஜய் வீட்டு மொட்டை மாடியில் தெரிந்த உருவம்..!! உடனே போலீஸை அழைத்த பாதுகாவலர்கள்..!! அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்..!!

Vijay 2025 2

நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தத இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் நடிகர் விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களமிறங்க உள்ளார். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற 2-வது மாநில மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வீட்டின் மொட்டை மாடியில் நேற்று ஒரு இளைஞர் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதை கவனித்த விஜய் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகள் அவரை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த போலீசார், அந்த இளைஞரை நீலாங்கரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பது தெரியவந்தது. மேலும், அவர் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், இவர் எப்படி விஜய் வீட்டிற்குள் நுழைந்து மொட்டை மாடி வரை சென்றார் என்பது தெரியவில்லை. இருப்பினும், அவரை மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Read More : மஞ்சள் காமாலை தீவிர நோயின் அறிகுறியே..!! மதுவால் கோமா நிலைக்கு போன ரோபோ சங்கர்..!! மரணத்திற்கு இதுதான் காரணம்..!!

CHELLA

Next Post

உஷார்!. குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் Crocs காலணிகள்!. மருத்துவர்கள் எச்சரிக்கை!.

Fri Sep 19 , 2025
க்ரோக்ஸ் காலணிகள் குழந்தைகள் மற்றும் டீனேஜர்கள் மத்தியில் பிரபலமான ஃபேஷனாக மாறிவிட்டன. Crocs மிகவும் வசதியானவை, லைட்ட்வெய்ட்டானவை, மற்றும் நீர்ப்புகாமையாக இருக்கின்றன. அதனால் பனி அல்லது மழை காலத்திலும் குழந்தைகள் எளிதாக அணிய முடிகிறது. ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் கால்களுக்கு Crocs காலணிகள் நல்லதா கெட்டதா என்ற கேள்வி எழுகிறது. அதாவது, இந்த வகை காலணிகளை தொடர்ந்து அணிவதால், முதுகுதண்டு பிரச்சனை, மூட்டுகளில் அழுத்தம், நடையில் பிரச்சனை ஏற்படும் […]
Crocs slipper

You May Like