தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.. தனக்கென லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.. தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் விஜய் தனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்..
அவரின் கட்சி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களமிறங்க உள்ளது.. அடுத்தடுத்து மாநாடுகளை நடத்திய விஜய் தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வீட்டின் மொட்டை மாடியில் நேற்று ஒரு இளைஞர் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதை கவனித்த விஜய் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகள் அவரை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த போலீசார், அந்த இளைஞரை நீலாங்கரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பது தெரியவந்தது. மேலும், அவர் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், இவர் எப்படி விஜய் வீட்டிற்குள் நுழைந்து மொட்டை மாடி வரை சென்றார் என்பது தெரியவில்லை. இருப்பினும், அவரை மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. விஜய் வீட்டின் மொட்டை மாடியில் இன்று காலை இளைஞர் ஒருவர் பதுங்கி இருந்ததால், அவரின் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இந்த சூழலில் Y பிரிவு பாதுகாவலர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது வெடிகுண்டு இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டு வருகிறது..
Read More : அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.. ரோபோ சங்கர் மறைவுக்கு விஜய் இரங்கல்!