“ஆண்டவர் வந்திருக்காரு ஏந்திருங்க..” கமலை பார்த்ததும் கதறி அழுத ரோபோ சங்கரின் மனைவி! கண் கலங்க வைக்கும் வீடியோ..!

kamal robo shankar

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..


இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.. கமலின் தீவிர ரசிகராக அறியப்பட்ட ரோபோ சங்கருக்கு அஞ்சலி செலுத்த கமல்ஹாசனை பார்த்த ரோபோ சங்கரின் மனைவியும், மகளும் கதறி அழுதனர்.. கமல் வந்திருக்கார் எழுந்திருங்க என்று கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது..

ரோபோ சங்கர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் ஆவார்.. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தபோதும், கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்கு கடைசிவரை கிடைக்காமலேயே போனது. ரோபோ சங்கரின் உடல்நலக்குறைவு குறித்து கமல்ஹாசன் அடிக்கடி விசாரித்து வந்திருக்கிறார். மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்ற போதும்கூட தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் ரோபோ சங்கரின் பேரன் பிறந்தபோதும்கூட, இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதியினர் குழந்தையுடன் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது குழந்தைக்கு ‘நட்சத்திரன்’ என்று கமல்ஹாசன் பெயர் வைத்தார்.

ரோபோ சங்கரின் மறைவுக்கு முதல் அஞ்சலியைத் தெரிவித்தவர் கமல்ஹாசன்தான். தனது பதிவில், “ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என்று உருக்கமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : கடைசி வரை நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசை..!! மனம் நொந்து போன உலக நாயகன்..!!

RUPA

Next Post

லட்சுமி நாராயண ராஜ யோகம் : இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! பணம், புகழ் சேரும்..!

Fri Sep 19 , 2025
விருச்சிக ராசியில் புதனும் சுக்கிரனும் இணைவது லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்கும். இந்த யோகம் அக்டோபர் மாதத்தில் உருவாகும். இந்த யோகத்தின் செல்வாக்கால், 3 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் நடந்து வரும் பிரச்சனைகளும் தீர்க்கப்படும். திடீர் நிதி ஆதாயங்களுடன், தொழில் வெற்றியும் அடையலாம். விருச்சிகம் செவ்வாய் கிரகத்தில் புதனும் சுக்கிரனும் இணைவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். செல்வம் அதிகரிக்கும். நல்ல தொழில் வாய்ப்புகள் […]
rare yogam horos

You May Like