மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் (ECIL) பல்துறைகளில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி பதவியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த முறையில் 4 ஆண்டுகள் காலத்திற்கு நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி:
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், கீழ்க்காணும் பொறியியல் துறைகளில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்:
- எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன்
- எலெக்ட்ரானிக்ஸ்
- EEE (Electrical and Electronics Engineering)
- ETC (Electronics and Telecommunication)
- E&I (Electronics and Instrumentation)
- எலெக்ட்ரிக்கல்
- கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering)
- தகவல் தொழில்நுட்ப பொறியியல் (IT)
- மெக்கானிக்கல்
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் துறையில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் துறைக்கு தொடர்புடைய குறைந்தது 1 வருட தொழிற்சார் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதில் 1 வருட தொழிற்பயிற்சி அனுபவமாக கருதப்படும்.
வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.
சம்பளம்: இப்பதவிக்கு தேர்வுச் செய்யப்படும் நபர்களுக்கு முதல் வருடம் மாதம் ரூ.25,000 வழங்கப்படும். இரண்டாம் வருடம் ரூ.28,000, மூன்று மற்றும் நான்காம் வருடம் மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால் எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணப்பதார்களில் இருந்து மதிப்பெண்கள் அடிப்படையில் 4இல் இருந்து 1 என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். 10-ம் வகுப்பு மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்குதேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணல் இடம்: ஹைதராபாத்
பணி நியமனம்: ஹைதராபாதில் வழங்கப்படும்
மதிப்பீட்டு விகிதங்கள்:
- கல்வித்தகுதி: 20%
- பணி அனுபவம்: 30%
- நேர்காணல்: 50%
- இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
விண்ணப்ப விவரம்: ஆர்வமுள்ளவர்கள் பொறியாளர்கள் https://www.ecil.co.in/ என்ற நிறுவனத்தின் இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏதும் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள் 22.09.2025.
Read more: பரபரப்பை கிளப்பிய கிட்னி திருட்டு வழக்கு… தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு…!