பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து பாவ்நகரில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய பிரதமர், தன்னம்பிக்கையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் “இன்று, இந்தியா ‘விஸ்வபந்து’ உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுதான் நமது மிகப்பெரிய எதிரி, ஒன்றாக நாம் இந்தியாவின் இந்த எதிரியை, சார்பு எதிரியை தோற்கடிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“வெளிநாட்டு சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு நாட்டின் தோல்வியும் அதிகமாகும். உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு, உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு தற்சார்பு கொண்ட நாடாக வேண்டும். நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால், நமது சுயமரியாதை பாதிக்கப்படும். 1.4 பில்லியன் நாட்டு மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது, ”என்று பிரதமர் மேலும் கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சியை மற்ற நாடுகளின் மீது விட்டுவிட முடியாது, எதிர்கால சந்ததியினரை ஆபத்தில் ஆழ்த்த முடியாது என்று பிரதமர் மேலும் கூறினார். 100 துயரங்களுக்கு ஒரே ஒரு மருந்துதான் இருக்கிறது, அதுதான் தன்னிறைவு பெற்ற இந்தியா” என்று அவர் கூறினார்.
Read More : வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த அளவை மீறினால் வருமான வரித்துறை நோட்டீஸ் வரும்? விதிகள் என்ன?