மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.. பன்முகத்திறமை கொண்ட மோகன்லால் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்படுகிறது.. செப்டம்பர் 23-ல் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு தாதா சாகே பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ நடிகர் மோகன்லாலில் திரைப்பயணம் பல தலைமுறையினருக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.
அவரது ஒப்பிடமுடியாத திறமை, பல்துறை திறன் மற்றும் இடைவிடாத கடின உழைப்பு ஆகியவை இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு தங்கத் தரத்தை அமைத்துள்ளன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மோகன் லாலுக்கு வாழ்த்து தெரிவித்தார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “மோகன்லால் சிறந்து விளங்குகிறார் மற்றும் பல்துறை திறனை வெளிப்படுத்துகிறார். பல தசாப்தங்களாக தனது சிறந்த படைப்புகளுடன், மலையாள சினிமா, நாடகத்தின் முன்னணி ஒளியாக அவர் நிற்கிறார், மேலும் கேரள கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
அவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார். ஊடகங்களில் அவரது சினிமா மற்றும் நாடகத் திறமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்..
மேலும் மோகன்லாலை வாழ்த்திய பிரதமர், “அவரது சாதனைகள் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” என்று கூறினார்.
கடந்த ஆண்டு, நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தனது 40 ஆண்டுகால திரை வாழ்க்கையில் நடிகர் மோகன்லால் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2001 இல் பத்மஸ்ரீ மற்றும் 2019 இல் பத்மபூஷன் விருதுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : கடினமான வாழ்க்கை முதல் கோடிகள் வரை.. ரசிகர்கள் நேசிக்கும் ரோபோ சங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு?



