கடைசி ஓவரில் த்ரில்!. 6 முறை சாம்பியனான இலங்கையை வீழ்த்தி, வங்கதேசம் அபாரம்!. பைனலை நோக்கிய முதல் அடி!.

Bangladesh vs Sri Lanka

ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய வங்கதேச அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ‘திரில்’ வெற்றி பெற்றது.


ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆசிய கோப்பை (‘டி-20’) 17வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த முதல் ‘சூப்பர்-4’ போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (22), குசால் மெண்டிஸ் (34) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கமில் மிஷாரா (5), குசால் பெரேரா (16) நிலைக்கவில்லை. கேப்டன் சரித் அசலங்கா (21) ஓரளவு கைகொடுத்தார். ஷோரிபுல் இஸ்லாம் வீசிய 18வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட தசுன் ஷனகா, 31 பந்தில் அரைசதம் கடந்தார். கமிந்து மெண்டிஸ் (1), வணிந்து ஹசரங்கா (2) ஏமாற்றினர். இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது. தசுன் ஷனகா (64 ரன், 6 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் முஸ்தபிஜுர் 3 விக்கெட் சாய்த்தார்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஜித் ஹசன் (0) ஏமாற்றினார். கேப்டன் லிட்டன் தாஸ் (23) ஓரளவு கைகொடுத்தார். பின் இணைந்த சைப் ஹசன், தவ்ஹித் ஜோடி நம்பிக்கை தந்தது. இருவரும் அரைசதம் விளாசினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்த போது சைப் ஹசன் (61) அவுட்டானார். துஷ்மந்தா சமீரா பந்தில் தவ்ஹித் (58) வெளியேறினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. ஷனகா வீசிய 20வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஜாக்கர் அலி (9), அடுத்த பந்தில் அவுட்டானார். நான்காவது பந்தில் மஹெதி ஹசன் (0) வெளியேறினார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து நசும் அகமது வெற்றியை உறுதி செய்தார். வங்கதேச அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷமிம் ஹொசைன் (14), நசுன் அகமது (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

Readmore: சிவன்–திருமால் ஒரே முகமாக அருள்பாலிக்கும் சங்கரநாராயணர் கோயில்.. தென்காசியில் ஆன்மிக அதிசயம்..!

KOKILA

Next Post

இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன் இதை கவனிக்க வேண்டும்...! மாணவர்களுக்கு UGC கொடுத்த எச்சரிக்கை...!

Sun Sep 21 , 2025
திறந்த நிலை, இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; உயர் கல்வி நிறுவனங்களில் இணையவழி, திறந்தநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அக்டோபர் 15- ம் தேதி வரை நடைபெறும். இதன் வழியே படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலை https://deb.ugc.ac.in இணைய தளத்தில் அறிந்து […]
UGC case 11zon

You May Like