IPBS..! 13,217 வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி…! மிஸ் பண்ணிடாதீங்க…!

Bank Jobs Recruitment.jpg 1

13,217 வங்கி பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.


கனரா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை ஐபிபிஎஸ் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன.

Office Assistants (Multipurpose), Officer Scale I, Officer Scale II (General Banking Office) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 13,217 காலியிடங்கள் உள்ளன. பணியில் சேர ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், சிஏ, வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல், மீன் வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் அல்லது கணக்கியல் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.9.2025 தேதியின்படி 18 முதல் 28, 30, 32, 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதி முறைப்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி ஆண்டுகளும், விதவைகள், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமும், முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு மூலமும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதன்மைத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநிலங்களில் நடைபெறும். விண்ணப்பக் கட்டணமாக பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.850. இதர பிரிவினர்களுக்கு ரூ.175 செலுத்த வேண்டும். www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

Vignesh

Next Post

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி!. வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உட்பட பல பொருட்களின் விலை குறைப்பு!. நாளைமுதல் அமல்!. அமுல் அதிரடி!

Sun Sep 21 , 2025
ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலியாக, நாளை (செப்டம்பர் 22) முதல் வெண்ணெய், ஐஸ்கிரீம் மற்றும் பால் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளை குறைத்து அமுல் அறிவித்துள்ளது. நுகர்வோர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அமுல் பிராண்டின் கீழ் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (GCMMF), அதன் 700க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 22 […]
amul

You May Like