மூடி திடீரென வெடித்து சிதறும் அபாயம் உள்ளதாக எழுந்த புகாரையடுத்து, 8,50,000 stainless steel பாட்டில்களை வால்மார்ட் நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது.
அமெரிக்கா முழுவதும் கடைகளில் வால்மார்ட் நிறுவனத்தின் “Ozark Trail 64 oz Stainless Steel Insulated Water Bottles” எனும் பாட்டில்களை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, இதை வாங்கிய பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் எழுந்தன. கார்பனேட்டட் பானங்கள், பழச்சாறு அல்லது பால் போன்றவற்றை அடைத்து வைத்து நீண்ட நேரம் கழித்து , திறக்கும்போது மூடி அதிக அழுத்தத்துடன் வெடித்து வெளியேறுவதாக சொல்லப்பட்டது. இதனால், மூன்று நபர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவருக்கு மூடி கண்ணில் பட்டு நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அமெரிக்க Consumer Product Safety Commission (CPSC) வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த பாட்டில்கள் பாட்டிலின் மூடி வலுவாக வெளியேறுவதால் கடுமையான காயங்கள் ஏற்படலாம் என்பதை உறுதிப்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் வால்மார்ட்டிடம் புகார் அளித்ததோடு, ஆணையமும் நிறுவனத்தை எச்சரித்தது. இதன் விளைவாக, இந்தப் பாட்டில்களை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்தி, அவற்றை வால்மார்ட் கடைகளுக்கு திரும்ப அனுப்பி முழு தொகையை திரும்பப் பெறுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இது பாதுகாப்புக்காக மிக முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. வால்மார்ட் நிறுவனம் இந்த ரீகால் (recall) அறிவிப்பை ஏற்றுக்கொண்டு, சுமார் 8.5 லட்சம் பாட்டில்களைத் திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து “எங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு எப்போதும் ஒரு முன்னுரிமையாகும்” என்று வால்மார்ட் தெரிவித்தது.



