பெண்களே..!! ரூ.7 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Gemini Generated Image 1org9g1org9g1org 1

தமிழ்நாடு அரசு, மீன் வளர்ப்பு மற்றும் வேளாண்மைத் துறையில் உள்ள தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பு தொழில் செய்வோர், தங்கள் தொழிலை விரிவாக்கி கொள்ள முடியும்.


நன்னீர் மீன்வளர்ப்பு : ஒரு ஹெக்டேருக்கு ஆகும் மொத்த செலவு ரூ.11 லட்சத்தில், பொதுப் பிரிவினருக்கு ரூ.4.40 லட்சம் (40%) வரையும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ரூ.6.60 லட்சம் (60%) வரையும் மானியம் கிடைக்கும். நாகை மாவட்டத்தில் பொதுப் பிரிவினருக்கு 2 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயோஃப்ளாக் இறால் வளர்ப்பு : ஒரு அலகு அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.18 லட்சத்தில், பொதுப் பிரிவினருக்கு ரூ.7.20 லட்சம் (40%) வரையும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ரூ.10.80 லட்சம் (60%) வரையும் மானியம் வழங்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 1 அலகும், பொதுப் பிரிவினருக்கு 2 அலகுகளும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மீன் விரலிகள் : மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு, ஒரு ஹெக்டேர் குளத்தில் 10,000 மீன் விரலிகள் இருப்பு வைக்க ரூ.5,000 மானியம் வழங்கப்படும். நாகை மாவட்டத்தில் 60 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்புவோர், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உழவர் நல சேவை மையங்கள் :

தென்காசி மாவட்டத்தில், வேளாண்மை பட்டதாரிகளுக்கான புதிய மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையின்படி, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும். 300 சதுர அடியில் மையம் அமைக்க ரூ.10 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்க, 30% மானியமாக ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் 5 நபர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

600 சதுர அடியில் மையம் தொடங்க ரூ.20 லட்சம் மதிப்பில், 30% மானியமாக ரூ.6 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த வாய்ப்பு 3 நபர்களுக்கு கிடைக்கும். வங்கி மூலம் கடன் ஒப்புதல் பெற்றபின், https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தை 04633 290718 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Read More : “என் பொண்டாட்டியை விட்ருடா”..!! கெஞ்சிய கணவன்..!! விடாத கள்ளக்காதலன்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!

CHELLA

Next Post

இதய நோய், உயர் ரத்த அழுத்தம்..!! பன்னீரை அதிகம் சாப்பிட்டால் பயங்கர ஆபத்து..!! எப்படி சாப்பிட வேண்டும்..?

Sun Sep 21 , 2025
நமது அன்றாட உணவில் சில பொருட்கள் அளவோடு எடுத்துக்கொண்டால் நன்மை தரும். ஆனால், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட ஒரு உணவுதான் சைவ உணவு பிரியர்களின் விருப்பமான பன்னீர். இதில் புரதம் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. ஆனால், இதை அதிகமாக உட்கொள்ளும்போது சில எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படலாம். ஆரோக்கிய நன்மைகள் : பன்னீர் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உடலுக்கு […]
Paneer 2025

You May Like