கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் ..!

money School students 2025

2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே கல்லூரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. 2025-2026ம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாண்டு சேர்க்கை பெற்ற மாணவர்கள் மற்றும் 2024-2025ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம். UMIS -University Management Information System (https://umis.tn.gov.in/) என்ற இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஏர் இந்தியா விபத்து: விமானிகளைக் குறை கூறுவது பொறுப்பற்ற செயல்..!! - உச்சநீதிமன்றம் கண்டனம்..

Tue Sep 23 , 2025
It is irresponsible to attribute pilot error to Air India crash: Supreme Court
supreme court

You May Like