குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு வேறு கோவிலுக்கு செல்லலாமா..? ஆன்மீகம் சொல்வது என்ன..?

Kula Deivam Temple 2025

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் இருக்கும். பல தலைமுறைகளாக அந்தக் குடும்பத்தை காத்து வரும் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் அவசியம். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபடும்போது, ஒருசில ஆன்மீக நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.


இதில் முக்கியமான கேள்வி, குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, வேறு கோயில்களுக்குச் செல்லலாமா..? என்பதுதான். இதுபற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்..?

குலதெய்வம் என்பது நம் முன்னோர்களின் ஆத்ம சக்தியுடன் தொடர்புடையது. இது நம் குடும்பத்தை காக்கும் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவதால், நம்முடைய பாவங்கள் நீங்கி, குடும்பத்தில் சுபிட்சமும், மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம். குலதெய்வ கோவிலில் நாம் வைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் நேரடியாக நம்முடைய குலத்துக்கு நன்மை பயக்கும் என நம்பப்படுகிறது.

வேறு கோவிலுக்குச் செல்லலாமா..?

பொதுவாக, குலதெய்வ கோவிலில் இருந்து திரும்பும்போது, வேறு எந்தக் கோயிலுக்கும் செல்லக் கூடாது என்று முன்னோர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம், குலதெய்வத்திடம் இருந்து நாம் பெற்று வரும் அருள் மற்றும் நேர்மறை ஆற்றல்கள், வழியில் உள்ள வேறு கோயிலுக்கு செல்லும்போது அங்கு தங்க வாய்ப்புள்ளது. இதனால், குலதெய்வத்தின் முழுமையான அருளை நம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது.

மேலும், குலதெய்வ கோயிலில் இருந்து வரும்போது, நாம் முழுமையான அமைதியுடனும், மன தூய்மையுடனும் இருக்க வேண்டும். வேறு கோயில்களுக்கு செல்லும்போது, அந்தச் சூழல் நம் மனநிலையை மாற்றக்கூடும். எனவே, குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்புவதுதான் சிறந்தது.

வேறு கோயில்களுக்கு எப்போது செல்லலாம்..?

குலதெய்வ கோவிலுக்குச் சென்றுவிட்டு, அன்றைய தினத்தில் வேறு எந்த கோயிலுக்கும் செல்லாமல் வீட்டிற்கு திரும்பி, ஒருநாள் கழித்து வேறு கோவில்களுக்கு செல்வது உகந்ததாக கருதப்படுகிறது. இது, குலதெய்வத்தின் அருள் நம்முடைய வீட்டில் முழுமையாக நிலைபெற உதவும்.

அதேபோல், சில அவசர காரணங்களுக்காக வழியில் வேறு கோவிலுக்கு செல்ல நேர்ந்தால், அங்கு சென்று வழிபட்டுவிட்டு, வீட்டிற்கு வந்த பிறகு, குலதெய்வத்தின் அருளை மனதார நினைத்து வழிபடுவதன் மூலம் அந்த நன்மைகளை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

Read More : சிவன் கோயிலுக்கு செல்லும்போதும் திரும்பி வரும்போதும் இந்த விஷயத்தை மட்டும் பண்ணாதீங்க..!! பக்தர்களே கவனம்..!!

CHELLA

Next Post

தொலைத்தொடர்பு சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறை வெளியீடு...!

Wed Sep 24 , 2025
தொலைத்தொடர்பு சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறைகளை 2025 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தொலைத்தொடர்பு (ஒலிபரப்பு மற்றும் கேபிள்) சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறைகள் 2025 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு சேவையாளர்கள் அளித்த ஆலோசனை அடிப்படையில் தொலைத்தொடர்பு சேவைகள் விதிமுறைகள் 2017 வரைவு திருத்தம் […]
Central 2025

You May Like