ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில் இரண்டாவது பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரு குடும்பத்தையும் இணைப்பதை கதைக்களமாக கொண்ட இந்த சீரியலில் கார்த்திக் ராஜா லீட் ரோலிலும் ரேவதி ஹீரோயினாக நடித்துள்ளார்.
நேற்றைய எபிசோடில், கோவிலுக்குள் மாறு வேஷத்தில் நுழைந்த மாயா, துப்பாக்கியால் ரேவதியை குறிவைத்து சுட்டுவிட்டு தப்பி ஓடுகிறாள். திடீர் சத்தம் கேட்டுக்கொண்டு ஓடி வந்த கார்த்திக், ரேவதி ரத்தத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். குடும்பம் முழுவதும் என்ன செய்வது என்று தெரியாமல் கதற, கார்த்திக் ரேவதியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார்.
மருத்துவமனையில் உயிர் மாயும் நிலையில் கிடந்த ரேவதி, “புருஷன் மடியில் உயிர் போற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு” எனச் சொல்கிறாள். அந்த வார்த்தைகளை கேட்ட கார்த்திக் கலங்கிப் போக, “உனக்கு எதுவும் ஆகாது, நான் இருக்கிறேன்” என்று உறுதி தருகிறார். ஆனால் ரேவதி, “ஒரே ஒரு முறை என்னை காதலிக்கிறேன் என்று சொல்லுங்க” எனக் கூற, மனம் நொந்த கார்த்திக், “உன்னை நான் காதலிக்கிறேன்” என சொல்கிறார். அதை கேட்ட ரேவதி மயங்கி விழ, உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதற்கிடையில் மாயா எங்கு போவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க, காளியம்மா தனது வீட்டில் ஒளிய இடம் கொடுக்கிறார். மருத்துவமனைக்கு வந்த பரமேஸ்வரி பாட்டியை சந்திரகலா தடுக்க, சாமுண்டேஸ்வரி அனுமதி அளிக்கிறார். பேத்தியின் நிலையை கண்டு பாட்டி கதறி, கோவிலுக்குச் சென்று கடவுளிடம் வேண்டுகிறார். அங்கு விபூதி பெற்ற பாட்டி, ICU-வில் கந்தசஷ்டி கவசம் பாடி ரேவதிக்கு பூசி விடுகிறாள். இதற்கிடையே கார்த்தி தான் பாட்டியின் உண்மையான பேரன் என்ற உண்மை சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதே கதை மீதான விறுவிறுப்பை அதிகப்படுத்தியுள்ளது.
Read more: 3 முறை கர்ப்பமாக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன்..!! நடிகை சாந்தினி வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு..!!



