தாலி கட்டி ரகசிய குடித்தனம்.. கள்ளக்காதலியை வீட்டிற்கே கூட்டி வந்து குத்தாட்டம்.. மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

sex affair 1

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வசிப்பவர் அருள்பாண்டி(38). லாரி டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த அம்மு என்பவரை காதலித்து 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் அருள்பாண்டிக்கும் அம்முவின் நெருங்கிய உறவுக்கார பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.


நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அதன்பிறகு யாருக்கும் தெரியாமல் நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருள்பாண்டி தன்னுடைய கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து, இவள் என் மனைவி.

இவளும் இனி நம்மோடு தான் இருப்பார் என்று மனைவி அம்முவிடம் கூறியுள்ளார். இதனால் குடும்பத்தின் பிரச்சனை வெடித்தது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அம்மு வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். நீண்ட நேரமாகியும் கீழே வராததால் குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கி கிடந்தது தெரிய வந்தது.

உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அம்முவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: 90-களின் நாயகன்..!! WWE வீரர் ரோமன் ரெய்ன்ஸின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?

English Summary

Husband brings prostitute home… wife commits suicide due to mental distress

Next Post

BREAKING | அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு என்ன ஆச்சு..? மருத்துவமனையில் சிகிச்சை..!! மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி காரணம்..!!

Wed Sep 24 , 2025
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவருக்கு வயிற்று வலி மற்றும் அஜீரணம் போன்ற உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு வயிற்று தொடர்பான […]
Periyasamy 2025

You May Like