fbpx

ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம்..!! நீங்களே இதை பண்ணலாம்..!!

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை பெறுவதற்கும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை பொறுத்து ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக ரேஷன் அட்டையில் இருந்து குடும்ப நபரின் பெயர் நீக்கம் செய்து விட்டது தெரிய வந்தால் அதனை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

  • அதற்கு முதலில் nfsa.gov.in/Default.aspx என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ரேஷன் கார்டு என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில் ‘Ration Card Details On State Portals’ என்ற என்பதை தேர்வு செய்து உங்களது மாநிலம், மாவட்டம், தொகுதியின் பெயர் மற்றும் பஞ்சாயத்து ஆகியவற்றை தேர்வு செய்து ரேஷன் கடையின் பெயர் மற்றும் ரேஷன் கார்டு வகை ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்த பக்கத்தில் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப நபர்களின் பெயர் பட்டியல் இருக்கும்.
  • இந்த பட்டியலில் இல்லாத பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அர்த்தம்.
  • நீங்கள் தகுந்த அரசு அலுவலகம் அல்லது இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டு உங்களது பெயரை மீண்டும் ரேஷன் கார்டில் இணைத்துக் கொள்ளலாம்.

Chella

Next Post

துப்பாக்கியால் சுட்ட காதலன்!… துடிதுடித்து இறக்கும் நிலையிலும் வீடியோ பதிவிட்ட காதலி!

Thu Nov 9 , 2023
பிரேசிலில் தனது காதலியை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. பிரேசிலின் நாட்டில் தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியில் உள்ள ஜடாயி என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் 27 வயது காதலனால் அவரது 23 வயது காதலி சுட்டுக் கொல்லப்படும்போது வீடியோவை காதலி பதிவு செய்துள்ளார். இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கும் அந்த வீடியோவில், வீட்டின் பால்கனியில் நின்றிருக்கும் காதலனை படம்பிடித்து வந்துள்ளார் காதலி. அந்த […]

You May Like