தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 720 குறைந்து ரூ. 84,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட 1 மாதமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், சென்னையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.82,000ஐ கடந்து விற்பனையானது. எனினும் பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது.. வார இறுதியில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது.. இந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. இதனால் தங்கம் விலை ரூ.84,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. எனினும் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது..
இந்த நிலையில் இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 90 குறைந்து ரூ.10,510க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 720 குறைந்து ரூ. 84,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. கடந்த 2 நாட்களில் ரூ.1040 விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆனால் இன்று மாலை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ. ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,50,000 விற்பனையாகிறது.
Read More : தூள்..! வெளிநாடு சென்று படிக்க ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை…! யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்…?



