பாலியல் அத்துமீறல்கள் அந்நியர்களால் மட்டுமல்ல, சில நேரங்களில் மிகவும் நெருக்கமான உறவுகளுக்குள்ளேயும் நடைபெறுகின்றன. குடும்பத்தின் கௌரவம், சமூகத்தின் விமர்சனம் போன்ற காரணங்களால் பலர் உண்மையை வெளியில் சொல்ல தயங்குகின்றனர். ஆனால், மௌனம் காப்பது குற்றவாளிகளுக்கு மேலும் துணிச்சலை அளிக்கிறது. இதற்கு உதாரணமாக, மகாராஷ்டிராவில் சொந்த தாயிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில், அரவிந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 32 வயது நபரை, அவரது சொந்த தாயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, அரவிந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது தாயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
குடும்பத்தின் கௌரவம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் அவப்பெயரை நினைத்து, நீண்ட நாட்களாக இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து மிரட்டல்கள் நீடித்ததால், இறுதியில் காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார், அரவிந்தை கைது செய்து, அவர் மீது தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை சேகரித்து வரும் போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவியும், மனநல ஆலோசனையும் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: 50 வயது பெண்ணின் சடலத்துடன் உடலுறவு… பின்னர் செய்த அதிர்ச்சி செயல்!



