fbpx

’சொந்த ஊருக்கு போற ஆர்வத்துல இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க’..!! சிக்கினால் ஆக்‌ஷன் தான்..!!

தீபாவளி என்றாலே பட்டாசுதான். படபடவென வெடிச்சத்தம் கேட்டால்தான் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டும். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

பணியாற்றி வரும் ஊர்களில் இருந்து பட்டாசுகளை வாங்கி தங்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விதிகளை மீறி ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் 1,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் நிலையங்களில் கூடுதல் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பட்டாசுகளை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனரா? என ஓடும் ரயில்களில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்த பின் ரயில்வே ஸ்டேஷனுக்குள் அனுமதிப்போம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

’டிண்டர் செயலியை இதற்காக தான் இளைஞர்கள் பயன்படுத்துகிறார்களா’..? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

Fri Nov 10 , 2023
டிண்டர் (Tinder) இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமான பயன்பாடு ஆகும். இதன் மூலம் மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் வகையில், டிண்டர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும், மக்கள் உறவுகளைப் பெறுவதற்கு இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தவில்லை. ஆனால், ஆச்சரியமாகத் தோன்றும் ஒரு வேலைக்காக பயன்படுத்துகிறார்கள். டிண்டரின் பயன்பாடு தொடர்பான முக்கிய தகவல்களை சமீபத்திய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. உண்மையில் மக்கள் தங்கள் சூழ்நிலைகளின் […]

You May Like