fbpx

இனி இதுக்கும் கட்டுப்பாடு…! டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2023-க்கு மத்திய அரசு ஒப்புதல்…!

மத்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகத் துறைக்கு டிஜிட்டல் மீடியா பிரச்சாரங்களை மேற்கொள்ள ஏதுவாக “டிஜிட்டல் விளம்பரக் கொள்கை, 2023”-க்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. டிஜிட்டல்மயமாக்கலுக்கு ஏற்ப மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து தகவல்களைப் பரப்புவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவத அரசு முடிவு செய்துள்ளது.

சமீப காலங்களாக, பார்வையாளர்கள் ஊடகங்களைப் பயன்படுத்தும் விதம் டிஜிட்டல் இடத்தை நோக்கிய மாற்றத்தைக் கண்டுள்ளது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டில் இப்போது இணையம், சமூக மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களுடன் இணைக்கப்பட்டு மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மார்ச் 2023 நிலவரப்படி தொலைதொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1172 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

ஓடிடி மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட் ஸ்பேஸில் ஏஜென்சிகள் மற்றும் அமைப்புகளை இணைக்க சிபிசிக்கு இந்த கொள்கை உதவும். சிபிசி இப்போது முதல் முறையாக அதன் பொது சேவை பிரச்சார செய்திகளை மொபைல் பயன்பாடுகள் மூலமும் வழிநடத்த முடியும். சமூக ஊடகத் தளங்கள் பொது உரையாடல்களின் பிரபலமான சேனல்களில் ஒன்றாக மாறியுள்ள நிலையில், இந்தத் தளங்களில் அரசு வாடிக்கையாளர்களுக்கு சிபிசி விளம்பரங்களை வைக்கும் செயல்முறையை இந்தக் கொள்கை மேலும் ஒழுங்குபடுத்துகிறது. பல்வேறு தளங்கள் மூலம் அதன் பரவலை மேம்படுத்த டிஜிட்டல் மீடியா ஏஜென்சிகளை ஒருங்கிணைக்க சிபிசிக்கு இந்தக் கொள்கை அதிகாரம் அளிக்கிறது.

Vignesh

Next Post

ரூ.1,000 உரிமைத்தொகை..!! முதல்வரே சொன்ன குட் நியூஸ்..!! பெண்களே இனி நிம்மதியா இருங்க..!!

Sat Nov 11 , 2023
பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், அதன் மூலம் அவர்களுக்கான உரிமையை நிலைநாட்ட அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இத்திட்டத்திற்கு விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே விண்ணப்பித்து அதில் சிலருக்கு ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மீதமுள்ளோர் பலர் மீண்டும் ரூ.1,000 வேண்டி மேல்முறையீடு செய்துள்ளனர். அவை அனைத்தும்  தீவிரமாக பரிசீலனையில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களுக்கான உரிமைத் தொகை கிடைக்கும் […]

You May Like