fbpx

செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை அதிரடி உயர்வு..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையால், கட்டுமான பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கட்டுமானத்துக்கு தேவையான ஆற்று மணல் 3 யூனிட் ரூ.40 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. எம்சாண்ட் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறப்ப்படுகிறது. இது தவிர அரசு நிர்ணயித்த விலையைவிட ரூ.120 அதிகம் என்கிற அளவிலேயே சிமெண்ட் மூட்டைகள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது. ப்ளு மெட்டல் உள்பட பல்வேறு கட்டுமான பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது

சிமெண்ட், எம் சாண்ட், செங்கல் என முக்கியமான கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளதாகவும் கட்டுமான துறையினர் கவலை அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்று பில்டர்கள் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக முதல்வரிடம் அளித்த மனுவில், உள்ளூர் கடைகளில் சிமெண்ட் ஒரு மூட்டை ரூ.440-க்கு விற்கப்படுகிறது. இது அரசு நிர்ணயித்த விலையைவிட ரூ.120 அதிகம். மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ப்ளு மெட்டல், எம்சாண்ட் ஆகிய வற்றின் விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு கட்டிடங்கள், வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் நீர்வழிகள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. செங்கற்கள் தட்டுப்பாடு காரணமாக விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது ஒப்பந்ததாரர்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது. இது பண்டிகை காலங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லக்கூடும். இதனால் அவர்கள் திரும்பியவுடன் கட்டுமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்படும்.

கட்டிட அனுமதி வழங்குவதை முறைப்படுத்தவும் கால தாமதத்தை குறைக்கவும் வேண்டிய தேவையும் உள்ளது. அனுமதி வழங்குவதற்கு 30 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறையின் சுமையை குறைக்க 100% உயர்த்தப்பட்ட கட்டிட திட்ட ஒப்புதல் கட்டணம் மற்றும் உள் கட்டமைப்பு மாற்றங்களில் சமீபத்திய அதிகரிப்பு ஆகியவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மதங்களும் வேறு!… காரணங்களும் வெவ்வெறு!… தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்?… சுவாரஸ்ய தகவல்!

Sun Nov 12 , 2023
இந்துக்களை தவிற பிற மதத்தவரும் வெவ்வேறு காரணங்களுக்காக தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர். வட இந்தியாவில் ஹிந்து புத்தாண்டாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தை முடித்த இராமன், இராவணனை வதம் செய்து மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் அயோத்திக்கு திரும்பிய நாளை தீபாவளி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். தீபாவளி கொண்டாட வேறு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. நரகாசுரனை கண்ணன் வதம் செய்த நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதிகாலை […]

You May Like