இந்தியப் புள்ளியியல் கழக மசோதா, 2025-ன் வரை…! சட்டம் இயற்ற கருத்து கேட்கும் மத்திய அரசு…!

Central 2025

மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், இந்தியப் புள்ளியியல் கழக மசோதா, 2025-ன் வரைவைப் பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்காக வெளியிட்டுள்ளது. முன்-சட்டமியற்றும் கலந்தாய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக அனைத்து பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகளும் ஆலோசனைகளும் வழங்கலாம் என தெரிவித்துள்ளது.


இந்தியப் புள்ளியியல் கழகம் டிசம்பர் 1931-ல் நிறுவப்பட்டது. அன்று முதல், இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்கக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 2020-ல் டாக்டர் ஆர்.ஏ. மஷேல்கர் தலைமையிலான ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், முன்மொழியப்பட்ட வரைவு மசோதாவானது, பயனுள்ள நிர்வாகம், தன்னாட்சி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள், 21 ஆம் நூற்றாண்டில் இந்தியப் புள்ளியல் கழகத்தின் முழுத் திறனையும் வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. வரைவு மசோதா மற்றும் கருத்துகளை அனுப்புவதற்கான படிவம் ஆகியவை அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://new.mospi.gov.in) கிடைக்கின்றன. ஆலோசனைகளை capisi-mospi[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24 அக்டோபர் 2025-க்குள் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நகத்தில் இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை பாருங்க.. இதயத்திற்கு ஆபத்து..!! - மருத்துவர் பகீர் பேட்டி..

Sun Sep 28 , 2025
'If You See This On Your Nails, Go To The Doctor Immediately' Podiatric Warns About Symptom That Indicates Leaky Heart
nails2

You May Like