தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று இரவு 7 மணிக்குமேல் நடைபெற்ற பிரசாரத்தின் போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த பரிதாபகரமான சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 113 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி தமிழகமெங்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தமிழக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலில் செலுத்திய சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிர்பாரா விபத்து.. யாரையும் குறைசொல்லி பயனில்லை.. இந்த சம்பவத்தை படிப்பினையாக ஏற்று இனி வரும் நாட்களில் கவனமாக செயல்பட வேண்டும். இந்த துயரத்தில் இருந்து நாம் அனைவரும் மீண்டு வரனும்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தவெகவினருக்கு எனது ஆறுதல்கள்.. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது” என தெரிவித்தார்.
Read more: உணவில் ஏன் பனீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்..? அதற்கான 6 காரணங்கள் இதோ…



