தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை நாமக்கல், கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. இதில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. காலை 8.45 மணிக்கு நாமக்கல் வருவார் என்று தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய் சென்னையில் இருந்தே 8.45 மணிக்கு தான் கிளம்பினார்.. இதனால் அவர் நாமக்கல் சென்றடையவே மதியம் சுமார் 2.30 மணி ஆனது.. இதை தொடர்ந்து அவர் கரூர் செல்வதற்கு இரவு 7.30 ஆனது.. சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் கால தாமதமாக வந்ததே இந்த கூட்ட நெரிசலுக்கு முதல் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.. இந்த எஃப்.ஐ.ஆரில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தனது அரசியல் பலத்தை காட்ட விஜய் வேண்டுமென்றே காலதாமதம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாமக்கல் பரப்புரைக்கு வரும் போதே விஜய் வேண்டுமென்றே தாமதம் செய்தார். கரூரிலும் விஜய் தரூர் பரப்புரை கூட்டத்திற்கு வரும் போதும் கூட விஜய் வேண்டுமென்றே காலதாமதம் செய்தார் என்று எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாதாரண சூழல் ஏற்படும் என்று புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை எச்சரித்தும் அறிவுரை வழங்கியும் கூட அவர்கள் கேட்கவில்லை.. விஜய் வருவது தாமதம் ஆனதால் எதிர்பார்ப்பு அதிகரித்து மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. தாமதமாக வந்த விஜய்யை பார்ப்பதற்காகவே காலையில் இருந்த காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.. விஜய் கரூருக்கு வருவதை திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதப்படுத்தியதால் அதிக அளவில் கூட்டம் கூடியது. விஜய் வேண்டுமென்றே ராங் ரூட்டில் பயணம் செய்து வந்தார்.. கரூர் பரப்புரை கூட்டத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்துவிட்டனர்.. பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..
தவெக மாவட்ட செயலாளர்கள் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்களை ஒழுங்குபடுத்தவில்லை.. நிபந்தனைகளை மீறி வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தி காலதாமதம் செய்தனர்.. வேண்டுமென்றே கால தாமதம் செய்ததுடன் காவல்துறையின் நிபந்தனைகளை மீறி தெருக்களில் ரோடுஷோ நடத்தினார்கள்..
தவெக தொண்டர்களை, நிர்வாகிகள் மரங்களின் மீது அமரச் செய்தனர்.. தொண்டர்கள் மரக்கிளைகள், கொட்டைகளில் ஏறி அமர்ந்தனர்.. உயிர் சேதம் ஏற்படும் என பலமுறை எச்சரித்தும் கூட தவெக நிர்வாகிகள் கேட்கவில்லை.. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



