fbpx

தமிழ்நாட்டிற்கு இன்றும் ஆரஞ்சு அலெர்ட்…!

தமிழ்நாட்டிற்கு இன்றும் ஆரஞ்சு அலெர்ட் கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம் ‌.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்றைய வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூரில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

தயார் நிலையில் 4967 சிறப்பு நிவாரண முகாம்கள்!… அமைச்சர் ராமசந்திரன் தகவல்!

Wed Nov 15 , 2023
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. கடலூரில் 16 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் மழையால், 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் […]

You May Like