fbpx

விவசாயிகளே..!! இன்று உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.2,000 வந்துவிடும்..!! செக் பண்ணுங்க..!!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவருக்குமே 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை 3 தவணைகளாக ஏப்ரல் – ஜுலை, ஆகஸ்ட் – நவம்பர் மற்றும் டிசம்பர் – மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் உள்ள பிர்சா கல்லூரியில், இன்று ‘பழங்குடியினர் கவுரவ தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரதமர் கிசான் திட்டத்தின் 15-வது தவணையை விடுவிக்கிறார். 15-வது தவணையாக, 8.0 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 15.11.2023 அன்று பிரதமரால் விடுவிக்கப்பட உள்ள ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையைப் பெறுவார்கள்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பயனாளிகளுக்கு மாற்றப்பட்ட மொத்த தொகை ரூ.2.80 லட்சம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி உதவி விவசாயிகளின் விவசாய மற்றும் பிற தற்செயல் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். மேலும், விவசாயிகள் தங்களது சுய விவரங்களான EKYC யை சரியாக, கட்டாயமாக வழங்கியிருக்க வேண்டும். இதில் தவறுகள் இருந்தால் நிதியுதவி கிடைக்காது.

Chella

Next Post

விவசாயிகள் கவனத்திற்கு... பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி...! உடனே விரையுங்கள்...

Wed Nov 15 , 2023
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள இன்று கடைசி நாள் ஆகும். எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர்களை விவசாயத்தில் நிலை பெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர்காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி காற்று, அதிக பரப்பளவில் பூச்சி நோய்த்தாக்குதல் […]

You May Like