இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), சமீபத்தில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தது. ஏஐ வளர்ச்சி, ஹெச்1பி விசா கட்டுப்பாடு, குறையும் புது ஒப்பந்தங்கள், வர்த்தக அழுத்தங்கள் போன்ற காரணங்களால் எடுக்கப்பட்ட இந்த முடிவு டெக் துறையில் அதிர்வலை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் இன்னும் அதிர்ச்சி அளிக்கின்றன.
சோஹம் சர்கார் என்ற எக்ஸ் பயனர், “என் கல்லூரி நண்பர் TCS-ல் வேலை செய்கிறார். அவர் சொன்னதின்படி, நிறுவனம் சமீபத்தில் 80,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. சிலருக்கு 3 மாத severance pay கொடுத்து அனுப்பியுள்ளார்கள். சிலர் எந்த நிவாரண தொகையும் இல்லாமல் வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று பதிவு செய்தார்.
இந்த பதிவு 2 நாளில் 5 லட்சம் பார்வைகள், 700-க்கும் மேற்பட்ட ரீட்வீட் பெற்றுள்ளது. கமெண்ட்களில் பலரும், “என் நண்பர்களுக்கும் இதே நிலைமை” என்று கூறியுள்ளனர். ஜஸ்ட் பிகாஸ் என்ற மற்றொரு எக்ஸ் பயனர், இது முற்றிலும் உண்மை, என்னுடைய மேனேஜர் 25 வருடங்களாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவரை கட்டாயப்படுத்தி VRS எடுக்க வைத்துள்ளனர்.
இதேபோல் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் 20 வருடம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். என்னுடைய முன்னாள் மேனேஜர் ஒவ்வொரு வாரமும் fluidity list வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனக்கு கிடைத்த பல்வேறு தகவலின் படி கிட்டத்தட்ட 40000 முதல் 50000 டெக் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு வைரலான நிலையில், டிசிஎஸ் செய்தித் தொடர்பாளர், “80,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது என்பது முற்றிலும் வதந்தி. இது உண்மையல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார். கடந்த வாரம் Accenture, 11,000 பேரை நீக்கியது. செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக வளர்ந்து வரும் நிலையில், உலகளாவிய டெக் துறை வேலைவாய்ப்பு சந்தை கடுமையாக பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Read more: நடனமாடி கொண்டிருந்த 19 வயது இளம்பெண்.. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..! வைரல் வீடியோ..