தொடர் விடுமுறை!. ரயில் பயணிகளுக்கு புதிய ரூல்ஸ்!. நடைமேடையில் நின்றால் அபாரதம்!. ரயில்வே அதிரடி!

train rules

விஜயதசமி, ஆயுத பூஜை தொடர் விடுமுறைகளை முன்னிட்டு தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல விதிகளை அறிவித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.


வரும் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. காலாண்டு விடுமுறையுடன் சேர்ந்தாற்போல, இந்த நாட்கள் வருவதால் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்தநிலையில், தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு, பல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், பயணியர் சிலர் டிக்கெட் எடுக்காமல் அல்லது உரிய டிக்கெட் இல்லாமல், முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர். இது, முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறாக உள்ளது. சில நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன.

எனவே, ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தெற்கு ரயில்வே பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரயில்வே எச்சரித்துள்ளது. இதனை கண்காணிக்க 50 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Readmore: அதிர்ச்சி!. சூரிய புயல்களால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் 3 மடங்கு அதிகம்!. நாசா எச்சரிக்கை!.

KOKILA

Next Post

கரூரில் நடந்த மரணம்... அரசியல் ஆதாயம் தேடும் பாஜக...! இந்திய கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Wed Oct 1 , 2025
கரூர் மரணங்களை மையப்படுத்தி பாஜக நடத்தும் மலிவான அரசியலை செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை நிகழ்வில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுமான துயரச் சம்பவம் நெஞ்சை விட்டு அகலாமல் வேதனைப்படுத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவரும், நிர்வாகிகளும் மக்களின் பாதுகாப்பை […]
amit shah vijay 2025

You May Like