வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டையை சேர்ந்த 31 வயது பெண் பியூட்டிஷியனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பியூட்டி டிப்ஸ், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்த இவருக்கு ஏராளமான பின்தொடர்பவர்கள் இருந்தனர். அந்த வழியில், காட்பாடி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (30) என்ற நபர் அறிமுகமானார்.
இருவரும் நீண்ட நாட்களாக பேசி வந்த நிலையில், நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். யுவராஜுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ரம்யா தனது செல்போனில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், விக்ரம் (34) என்ற இன்னொரு நபருடன் ரம்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. ஒருநாள் ரம்யாவின் செல்போனை பார்த்த விக்ரம், யுவராஜுடன் இருந்த புகைப்படங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை ரம்யாவுக்கு தெரியாமல் தன்னுடைய மொபைலில் சேமித்துக் கொண்டார். பின்னர் ரம்யாவை பணம், நகை கேட்டு மிரட்டத் தொடங்கினார்.
ரம்யா, விக்ரமுக்கு பணம், நகைகளை வழங்கிய விஷயம் கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ரம்யாவின் கணவருக்கும் விக்ரம்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இறுதியில் கணவர், பரதராமி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்ததால், விக்ரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த விக்ரம், பழிவாங்கும் நோக்கில் ரம்யாவின் யுவராஜுடன் இருந்த புகைப்படங்களை மீண்டும் அனுப்பி, மிரட்டி பணம் கேட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த ரம்யா, உடனே பேரணாம்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விக்ரமையை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Read more: கணவர் மைனராக இருந்தாலும், மனைவிக்கு ஜீவனாம்சம் செலுத்த வேண்டும்!. உயர் நீதிமன்றம் தீர்ப்பு!



