திடீரென வெடித்த சண்டை..!! ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி..!! நண்பனுக்கு போன் போட்ட கணவன்..!! அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்..!!

Crime 2025

டெல்லிக்கு அருகே உள்ள குருகிராம் பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பணியாற்றும் ஒரு தொழில்நுட்ப நிபுணர், தனது மனைவியை கொலை செய்த பிறகு, நண்பரிடம் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகத் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று அந்தத் தொழில்நுட்ப ஊழியருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


அப்போது, ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற கணவர், மனைவியை தாக்கி அடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையை செய்த உடனேயே, அந்த நபர் தன் நெருங்கிய நண்பர் ஒருவருக்குத் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து இந்த தகவலை பகிர்ந்துள்ளார். தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், “நான் என் மனைவியை கொன்றுவிட்டேன், நானும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்” எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இந்தத் தகவலைக் கேட்டுப் பதறிப்போன நண்பர், உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். நண்பரின் தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கே மனைவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். ஆனால், கொலை செய்த கணவர் உயிரோடுதான் இருந்துள்ளார். அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது அதீத மன அழுத்தத்தில் இருந்தாரா என்பது உடனடியாக தெரியவில்லை.

இருப்பினும், அவரை உடனடியாக கைது செய்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட மனக்கசப்புகள் நீண்ட நாட்களாக இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : உடல் எடை குறைப்புக்கு மருந்து, மாத்திரைகள்..!! நம்பாதீங்க.. மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி காரணம்..!!

CHELLA

Next Post

இஸ்லாத்திற்கு முன்பு சவுதி அரேபியாவில் என்ன இருந்தது? தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் வெளியான ரகசியங்கள்..!

Wed Oct 1 , 2025
Archaeological excavations have revealed what existed in Saudi Arabia before the arrival of Islam.
what existed before islam yearold secrets unearthed in saudi arabiad31baf5a 2814 43ff aaf4 0e98e7ff273b 415x250 1

You May Like