7-க்கும் மேற்பட்ட உலகளாவிய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும், அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படாவிட்டால் அது அமெரிக்காவிற்கு ஒரு “பெரிய அவமானம்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
செவ்வாய்கிழமை குவாண்டிகோவில் ராணுவத் தலைவர்களிடம் பேசிய டிரம்ப், காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது சமீபத்திய திட்டத்தைக் குறிப்பிட்டு பேசிய ட்ரம்ப், “நாங்கள் அதை தீர்த்து வைத்தோம் என்று நினைக்கிறேன். பார்ப்போம். ஹமாஸ் ஒப்புக் கொள்ள வேண்டும், அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், அது அவர்கள் மீது மிகவும் கடுமையாக இருக்கும். ஆனால் அனைத்து அரபு நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இது ஒரு அற்புதமான விஷயம். அது ஒன்றிணைந்தது.” என்று தெரிவித்தார்..
தனது காசா திட்டம் வெற்றி பெற்றால், அது 8 மாதங்களில் ‘8’ மோதல்களின் தீர்வைக் குறிக்கும் என்று ட்ரம்ப் கூறினார், இது வேறு யாரும் சாதிக்காத ஒரு சாதனையாகும். நோபல் பரிசைப் பற்றி பேசியஅவர், “நிச்சயமாக இல்லை. அவர்கள் அதை ஒரு மோசமான காரியத்தைச் செய்யாத ஒருவருக்குக் கொடுப்பார்கள். டொனால்ட் ட்ரம்பின் மனதைப் பற்றியும், போரை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றியும் ஒரு புத்தகத்தை எழுதிய ஒருவருக்குக் கொடுப்பார்கள்… நோபல் பரிசு ஒரு எழுத்தாளருக்குச் செல்லும், ஆம், ஆனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றார்.
தான் தனிப்பட்ட முறையில் விருதைத் தேடவில்லை என்றாலும், இந்த அமைதி முயற்சிகளுக்கு நாடு அங்கீகாரம் பெறத் தகுதியானது என்றும், இந்த சாதனைகளுக்கு அடித்தளமாக ஒப்பந்தம் செய்வதில் தனது நிபுணத்துவத்தை வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார். 8 ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது ஒரு குறிப்பிடத்தக்க மரியாதை என்று ட்ரம்ப் விவரித்தார்.