வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இதனால், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதயக் கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர் எச்சரித்துள்ளார்.
சஃப்தர்ஜங்கைச் சேர்ந்த முன்னாள் எலும்பியல் மருத்துவர் ஒபைத் ரெஹ்மானின் கூற்றுப்படி, 29 வயதான ஒரு பெண்ணுக்கு கோலெகால்சிஃபெரால் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது, இது வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் ஒரு ஆபத்தான நிலை, இது உயிருக்கு ஆபத்தானது. அதாவது ஆரோக்கியமாகத் தோன்றும் இந்த பெண், வாரத்தில் ஐந்து நாட்கள் ஜிம், சுத்தமான உணவு, கெட்டப்பழக்கங்கள் இல்லை என்றும் இவரை பார்த்தால் 100 வயது வரை வாழ்வாள்’ என்று நினைப்பீர்கள்.” ஆனால், தனது கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக வந்தார்,
அப்போது, எப்போதும் குமட்டல் இருப்பதாகவும், சில இரவுகளில் இதயம் மிகவும் மோசமாக துடிப்பதாகவும், இதன் காரணமாக தூங்க முடியவில்லை என்றும் மற்ற நாட்களில், மிகவும் சோர்வாக இருப்பதாகவும், படிக்கட்டுகளில் ஏறவே முடியவில்லை,” என்றும் தன்னிடம் கூறியதாக மருத்துவர் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக இந்த அறிகுறிகள் மன அழுத்தம் மற்றும் அதிக வேலை காரணமாக இருக்கலாம் என்று அப்பெண்ணின் பெற்றோர்கள் நினைத்திருந்துள்ளனர்.
ஆனால் பின்னர், அவள் கால்களில் வீக்கம், வீங்கிய முகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தொடங்கியபோது, அவள் தன்னைத்தானே பரிசோதித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். சோதனையின் முடிவில் அதிர்ச்சி காத்திருந்தது. அப்பெண்ணின் சிறுநீரகங்கள் செயலிழந்தன, கால்சியம் அளவுகள் ஆபத்தான அளவில் உயர்ந்தன, இதயம் நிலையற்றதாக இருந்தது தெரியவந்தது.
ஆரம்பத்தில், அவளுக்கு புற்றுநோய் இருப்பதாக அஞ்சப்பட்டது, ஆனால் இறுதியில், அவளுக்கு வைட்டமின் டி நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பெண் மருந்துச் சீட்டு இல்லாமல், அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் இது நிகழ்ந்துள்ளது.
வைட்டமின் டி நச்சுத்தன்மை என்றால் என்ன? ஹைப்பர்வைட்டமினோசிஸ் டி என்றும் அழைக்கப்படும் வைட்டமின் டி நச்சுத்தன்மை, உங்கள் உடலில் அதிகப்படியான வைட்டமின் டி இருக்கும்போது ஏற்படுகிறது. பரிந்துரைக்கப்பட்டதை விட அதிக அளவு வைட்டமின் டி அல்லது சுயமாக பரிந்துரைக்கப்பட்ட அதிகப்படியான மருந்து சப்ளிமெண்ட்டை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் ஒரு அரிய சிக்கலாகும். அதிகப்படியான வைட்டமின் டி ஹைபர்கால்சீமியாவுக்கு வழிவகுக்கிறது, இதுவே அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, சிறுநீரக செயலிழப்பு தவிர, வைட்டமின் டி நச்சுத்தன்மை அசாதாரண இதய தாளம், நிலையற்ற நடை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
வைட்டமின் டி நச்சுத்தன்மையின் அறிகுறிகள்: பசியின்மை
குமட்டல் மற்றும் வாந்தி
மலச்சிக்கல்
நீரிழப்பு
தாகம் அதிகரித்தது
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
குழப்பம், சோம்பல் மற்றும் சோர்வு
தசை பலவீனம் மற்றும் நடப்பதில் சிரமம்
எலும்பு வலி
சிறுநீரக கற்கள்.