“ நீங்கலாம் ஒரு மனுஷனா? திரையில் மட்டும் தான் ஹீரோ…” விஜய்யை கடுமையாக சாடிய பிக்பாஸ் அசீம்!

vijay azeem

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் பிக்பாஸ் அசீம் விஜய்யை கடுமையாக சாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.. ரஜினி, கமல் தவிர பெரிய ஹீரோக்களே இதுகுறித்து வாய் திறக்காத நிலையில் அவர் விஜய்யை விமர்சித்துள்ளார்.. அந்த வீடியோவில் பேசிய அவர் “திரு விஜய் அவர்களே.. உங்களை பார்க்க வந்த கூட்டம்.. அத்தனை பேர் கூட்ட நெரிசலில் மூச்சு முட்டி திணறுவதை நீங்களே பார்த்தீங்க.. பார்த்து என்ன செய்தீர்கள்.. ஒன்னும் பண்ணல.. கரூரில் இருந்து நீங்கள் திருச்சி போன போது உங்களுக்கு ஃபோன் வராமலா இருந்தது.. அப்ப நின்னுங்கீளா? ஒன்னும் நிக்கல.. திருச்சி விமான நிலையத்தில் உங்களிடம் சார்.. 30 பேர் இறந்துவிட்டார்களே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.. அப்போதும் உங்கள் காதில் வாங்கியும் வாங்காத மாதிரி புற முதுகை காட்டி ஓடினீங்க.. நீங்கள் எல்லாம் என்ன தலைவர்? நீங்கள் என்ன மனிதர்?


உங்களை பார்த்து திரையில் கைதட்டினவர்கள் தான் வந்தார்கள்.. அங்க சின்ன குழந்தை வந்தது.. அந்த குழந்தை உங்களுக்கு ஓட்டு போட வந்ததா? ஒரு சின்ன குழந்தை கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு கழுத்து எலும்பு முறிந்து இறந்துள்ளது.. கேட்குற எங்களுக்கு நெஞ்சு பதைக்குது.. ஆனா உங்களுக்கு கொஞ்சம் கூட அதைப்பற்றி கவலை இல்லை.. நேராக சென்னை வந்துட்டீங்க..

இந்த விஷயத்தை பேசவே உங்களுக்கு 4 நாள் தேவையா? மேடைக்கு மேடை திமுக ஆட்சி பற்றி குறை சொன்னீர்களே.. நீங்கள் எந்த ஆட்சியை பற்றி குறை சொன்னீர்களோ.. அந்த ஆட்சி தான். முதல்வர் ஸ்டாலின் அன்றிரவே நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்..

நீங்கள் குறை சொன்ன ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுடன் நின்றார்கள்.. ஆனா நீங்கள் மக்களுடன் நிற்கவில்லை.. 28,000 பேர் சேர்ந்த கூட்டத்தில் 41 பேர் இறந்திருக்காங்க.. அதை சந்திக்க தைரியம் இல்லாத நீங்க.. முதல்வராகி என்ன செய்யப் போறீங்க? ஒன்னும் செய்யப் போவதில்லை. ஆனால் முதல்வராக வேண்டுமெ என்ற பகல் கனவு நிஜமாகாது.. இது எல்லாமே மக்களுக்கு தெரியும்.. இன்னும் ஓரிரு வாரங்கள் கழித்து மேடையில் போய் அழுவீர்கள்.. மேடைக்கு மேடை வசனம் பேசி திரையில் மட்டும் தான் ஹீரோ.. தரையில் இல்லை..” என்று தெரிவித்தார்..

இன்று திரையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் ரஜினி, கமலை தவிர ஒருவர் கூட கரூர் சம்பவம் குறித்து ஏன் எந்த கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.. விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தால் தங்கள் படத்தை விஜய் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்ற பயம் தான் எனவும் கடுமையாக சாடினார்..

Read More : விஜய்க்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பில் குறைபாடு..? விரைவில் Z பிரிவு பாதுகாப்பு..? – விளக்கம் கேட்கும் உள்துறை..

English Summary

Bigg Boss Aseem has released a video criticizing Vijay over the Karur crowd issue.

RUPA

Next Post

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இந்த நேரத்தில் ரயில்களில் சார்ஜ் செய்ய முடியாது..! முக்கிய அப்டேட்!

Thu Oct 2 , 2025
According to the new rules, sockets on trains should only be used to charge mobile phones or laptops.
INDIAN RAILWAYS 2025

You May Like