நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது கடினமானது. தினசரி ஆரோக்கியமான உணவையும், உடற்பயிற்சியையும் செய்தாலே சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இன்று நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்டோர் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டும். சில பழக்கங்களை பின்பற்றாதால் இதய நோய்கள், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற தீவிர சிக்கல்கள் ஏற்படலாம்.
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும்: நீரிழிவு நோயாளர்களுக்கு காலை எழுந்தவுடன் ஒரு அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். இரவு முழுவதும் நீர் உடலில் குறைந்து இருக்கிறது. காலையில் தண்ணீர் குடிப்பதால் உடலை மீண்டும் நீரேற்றமாக வைத்துக் கொள்ளலாம். இது உடல்நலத்திற்கு அடிப்படையானது. தண்ணீர் குடிப்பதால் குடல் முழுவதும் சுத்தமாகி செரிமானம் சரியாக நடைபெற உதவும். இது உணவிலிருந்து சரியான ஊட்டச்சத்துகளை உடல் பெற்றுக்கொள்ள உதவுகிறது.
காலையில் தண்ணீர் குடிப்பதால் செரிமான செயல்பாடுகள் சரியாக நடைபெறும். இது பசியையும் கட்டுப்படுத்தி, தினசரி உணவு எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை அளவு கடுமையாக உயராமல் இருக்க உதவும். காலை எழுந்தவுடன் தண்ணீர் குடித்தால் மனமும் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதன் மூலம் நாளை முழுவதும் ஆற்றல் அதிகமாக இருக்கும், வேலை செய்யும் திறனும் உயரும். நீரிழிவு நோயாளர்களுக்கு, காலையில் தண்ணீர் குடிப்பது இரத்த சர்க்கரை உயர்வை தடுக்க உதவுகிறது. இது உடலில் இன்சுலின் செயல்பாடுகளை அதிகரித்து, சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.
காலை நடைப்பயிற்சி செய்ய வேண்டும்: காலை நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இது உடலைச் சரியாக செயல்பட வைக்கும் மற்றும் எடை குறைக்கும். தினசரி நடைப்பயிற்சி நீரிழிவு நோயாளர்களுக்கு மிகவும் நல்ல உடற்பயிற்சி.
இரத்த சர்க்கரை அளவை வீட்டிலேயே பரிசோதிக்கவும்: சந்தையில் கிடைக்கும் குளுக்கோமீட்டர் மூலம் வீட்டிலேயே உங்கள் சர்க்கரை அளவை தெரிந்து கொள்ளலாம்.
காலையில் எழுந்தவுடன் சர்க்கரை அளவை சரிபார்த்தால், உடல் நிலையை எளிதில் கண்காணிக்க முடியும்.
காலை உணவுக்குக் கவனம்: காலை உணவை தவிர்க்க வேண்டாம். எண்ணெய் உணவுகள், இனிப்புகள் அதிகமாக சாப்பிட வேண்டாம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்தால் சர்க்கரை கட்டுப்பாடில் இருக்கும்.
கால் மற்றும் பாத ஆரோக்கியத்தை பரிசோதிக்கவும்: நீரிழிவு நோயால் காலில் சிக்கல்கள் ஏற்படலாம். காலை எழுந்தவுடன் பாதங்களை பரிசோதிக்க வேண்டும். பாதங்கள், விரல் நகங்கள் நிறம் மாறினால் அல்லது கொப்புளங்கள், காயங்கள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
Read more; Flash : ஹேப்பி நியூஸ்.. ஒரே நாளில் ரூ.880 குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் நிம்மதி..