அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியை சேர்ந்த லட்சுமி பிரியா, கடந்த ஏப்ரல் மாதத்தில் மணமேல்குடி காவல் நிலையத்திற்கு பணியமர்த்தப்பட்டார். அவரது கணவர் சக்திமுருகன், தா. பழூரில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு 4 வயது மகனும், 3 வயது மகளும் உள்ளனர்.
பணியிட மாற்றம் காரணமாக, லட்சுமி பிரியா மணமேல்குடி வடக்கூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வராததால் சக ஊழியர்கள் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர் எடுத்து பேசாததால், சந்தேகமடைந்த போலீசார் அவரது வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினர். நீண்ட நேரம் பதில் வராததால், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, லட்சுமி பிரியா மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காலை பணிக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது யூனிபார்மை அயர்ன் செய்யும்போது அயர்ன் பாக்ஸில் மின்கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தியயும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: “உன் அம்மா உயிரோட இருக்கணுமா”..? அப்படினா இதை பண்ணு..!! இளம்பெண்ணிடம் வேலையை காட்டிய சாமியார்..!!