மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி (NLC India Limited) 2025ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி (Apprenticeship) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்:
தொழிழ் பிரிவு அப்ரண்டிஸ்
ஃபிட்டர் – 124
டர்னர் – 45
மெக்கானிக் – 120
எலெக்ட்ரிஷியன் – 174
வையர்மேன் – 119
மெக்கானிக் – 5
பிளம்பர் – 5
ஸ்னோகிராப்பர் – 20
வெல்டர் – 125
COPA – 30
பிரிஞ்சு, ஏசி கண்டிஸ்னர் மெக்கானிக் – 10
Moulder – 5
கார்ப்பெண்டர் – 5
அப்ரண்டிஸ் பயிற்சி
பார்மசி – 3
வணிகம் – 68
கணினி அறிவியல் – 89
கணினி பயன்பாடு – 49
தொழில் நிர்வாகம் – 47
புவியியல் – 12
வேதியியல் – 11
நர்சிங் – 34
மைக்ரோ பயோலாஜி – 1
வயது வரம்பு: 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் 01.04.2007 தேதியில் அல்லது முன்னர் பிறந்தவரா இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
* தொழில் பிரிவில் உள்ள இடங்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ (ITI) பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* மேலும் NCVT / SCVT வழங்கிய NTC / PNTC சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
* பட்டப்படிப்பு பிரிவுகளுக்கு பி.பார்ம், பி.காம், பி.எஸ்ச், பி.சி.ஏ, நர்சிங் போன்ற பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்க தகுதியான கல்வி ஆண்டுகள்: 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025.
ஊக்கத்தொகை:
- ஐடிஐ தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,019 உதவித்தொகையாக வழங்கப்படும்.
- பட்டப்படிப்பு தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.12,524 வழங்கப்படும்.
- தொழிற்பயிற்சி பெறுபவர்களில் மாதம் ரூ.4,500 அரசு மூலம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? தொழிற்பயிற்சிக்கு www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளவும். உரிய ஆவணங்களுடன் இணைத்து தபால் வழியாக விண்ணப்பத்தை அனுப்பி வைக்கப்பட வேண்டும். அக்டோபர் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்றடைய வேண்டும்.
முகவரி:
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி
பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி இந்தியா நிறுவனம்,
வட்டம் – 20, நெய்வேலி – 607803.



