நாக்கு செத்துப் போன நடுவர்கள்..!! குக் வித் கோமாளி செஃப்களை திட்டித் தீர்த்த ரஞ்சித்..!! பிரியா ராமனுக்கு தான் டைட்டில்..?

CWC 2025

தமிழ் சினிமாவின் பிரபலமான தம்பதிகளான நடிகர் ரஞ்சித் மற்றும் நடிகை பிரியா ராமன் குறித்து தற்போது ஒரு பரபரப்பான விவாதம் பேசப்பட்டு வருகிறது. 90-களில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்த ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 6-ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.


சமையல் திறமையாலும், கோமாளிகளுடன் அவர் காட்டிய பாசத்தாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிரியா ராமன், எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வெளியேற்றம், அவரது கணவர் ரஞ்சித்தை சற்றும் சகித்துக் கொள்ள முடியவில்லை. தனது மனைவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட விதம் குறித்து நடிகர் ரஞ்சித் பேசிய உருக்கமான கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன.

அவர் கூறுகையில், குக் வித் கோமாளியில் பிரியா ராமனுக்கு டைட்டில் கொடுக்கவில்லை எனப் பலரும் வருத்தப்பட்டார்கள். அங்கே இரண்டு நடுவர்கள் இருக்கிறார்கள். அவர்களது நாக்கு செத்துப் போயிருக்கும். அவர்கள் தொட்டுப் பார்த்து, ‘இது நல்லா இல்லை’ என்று சொன்னால், அதற்கு நாம் பொறுப்பாக முடியாது. நாற்பது பேர் சமைத்ததை சாப்பிட்டுவிட்டு, நல்லா இருக்கு என்று சொல்லும் நாக்கை பற்றி நமக்குத் தெரியாதா? அதனால், நீ அதைப் பற்றி எல்லாம் பார்க்காதே பிரியா என்று நான் அவளிடம் சொன்னேன்” என்றுள்ளார்.

டைட்டில் சர்ச்சை :

பிரியா ராமன் ஆரம்பம் முதலே பலமுறை செஃப் ஆஃப் தி வீக் விருதை வென்றிருந்தும், இறுதி நேரத்தில் அவர் வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பல ரசிகர்கள், ரஞ்சித்தை போலவே நடுவர்களின் தீர்ப்பு நியாயமற்றதாக இருந்ததாகவும், இந்த சீசனில் யாருக்கு டைட்டில் என்பதை முன்கூட்டியே முடிவெடுத்துவிட்டார்கள் என்றும் விமர்சனங்கள் வைத்தனர்.

ரஞ்சித் சுட்டிக்காட்டியது போல, அந்த சீசனுக்கு ராஜுவுக்கு டைட்டில் வழங்கப்பட்டது. ராஜு திறமையானவராக இருந்தாலும், பலர் பிரியா ராமன் அந்த டைட்டிலுக்கு தகுதியானவர் என்று நம்பினர். ரஞ்சித்தின் இந்த கோபமான பேச்சு, நிகழ்ச்சியின் தீர்ப்பு முறை மீது மக்கள் மத்தியில் இருந்த சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துவது போல அமைந்தது.

Read More : இன்று முதல் 100% பாதுகாப்பு..!! ஆன்லைன் பரிவர்த்தனையில் அதிரடி மாற்றம்..!! Gpay, PhonPe-வை உடனே அப்டேட் பண்ணுங்க..!!

CHELLA

Next Post

தவறுதலாக கூட சீத்தாப்பழ விதையை விழுங்கிடாதீங்க.. இந்த பிரச்சனையெல்லாம் வரும்..!! - நிபுணர்கள் வார்னிங்

Wed Oct 8 , 2025
Don't swallow sycamore seeds even by mistake.. All these problems will come..!! - Experts Warning
custard apple

You May Like