இன்றைய காலத்தில் இளைஞர்களின் பிரதான காலை உணவாக தலை தூக்கி வரும் கார்ன் ஃப்ளேக்ஸ்(corn flakes)-னை தினம் சாப்பிடுவது நல்லதா?. இதை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
கார்ன் ஃப்ளேக்ஸில் போதுமான அளவு மாவுச்சத்து உள்ளது. இந்த போதுமான அளவு மாவுச்சத்து தசைகளின் தளர்வுக்கு வழிவகுத்து உடல் சோம்பலுக்கு காரணமாகிறது. அந்த வகையில் இந்த கார்ன் ஃப்ளேக்ஸ் காலை உணவுக்கு ஏற்ற உணவு அல்ல என்று கூறப்படுகிறது. கார்ன் ஃபிளக்கிஸின் கொழுப்பின் உள்ளடக்கம் அதிகம் காணப்படுகிறது. இவை ரத்த நாளங்களில் தடிப்புகள் மற்றும் கொழுப்பு தேக்கத்தை உண்டாக்கி இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
கார்ன் ஃபிளேக்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இருந்தபோதிலும் இதில் காணப்படும் குறிப்பிட்ட அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உடல் பருமனுக்கு வழிவகுப்பதோடு உடல் எடையையும் அதிகரிக்கிறது. தினமும் கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடும் நபர்களிடையே எலும்பு மெலிதல் (ஆஸ்டியோபோரோசிஸ்) நோய் மூட்டு வலி, உடல் தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகம் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சோளம் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கார்ன் ஃபிளேக்ஸில் அதிகளவு சர்க்கரை உள்ளடக்கம், பற்சிதைவு மற்றும் வலுவிழந்த ஈறுகளுக்கு வழிவகுக்கிறது. கார்ன் ஃபிளேக்ஸின் மூலப் பொருளான சோளத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பல உள்ளது.இருப்பினும் இதன் அதிகப்படியான நுகர்வு, குடல் பகுதியில் எரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
கார்ன் ஃப்ளேக்ஸின் அதிகப்படியான நுகர்வு, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.அந்த வகையில் இந்த கார்ன் ஃபிளேக்ஸ் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆபத்து நிறைந்த உணவாக உள்ளது. தகவலின்படி, கார்ன் ஃபிளேக்ஸ் ஆனது பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உணவாக பார்க்கப்படுகிறது. இதை நிரூபிக்கும் உறுதியான ஆய்வு முடிவுகள் இதுவரை இல்லை.