ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது, மேலும் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே மச்சில் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கும்ப்காடி வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது,
இதனை தொடர்ந்து ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது, மேலும் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த ராணுவ வீரர்கள் இன்னும் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஊடுருவல் முயற்சி இருக்கலாம் என்று ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
திங்கட்கிழமை முன்னதாக, ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள காம்னேவாலா கிராமத்திற்கு அருகே வாகனம் கவிழ்ந்ததில் ஒரு ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த 33 வயது மேஜர் ஒருவர், ராம்கர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு லெப்டினன்ட் கர்னல், இரண்டு மேஜர் தர அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
Readmore: உஷார்!. 99% மாரடைப்புகளை தடுக்க முடியுமா?. ஒரு வருடம் முன்பே தோன்றும் 4 முக்கிய அறிகுறிகள்!.