மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,101 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
பணியிட விவரம்:
- ஐடிஐ பிரிவில் – 787
- பட்டப்படிப்பு பிரிவில் – 314 இடங்கள்
தொழிழ் பிரிவு அப்ரண்டிஸ்
- ஃபிட்டர் – 124
- டர்னர் – 45
- மெக்கானிக் – 120
- எலெக்ட்ரிஷியன் – 174
- வையர்மேன் – 119
- மெக்கானிக் – 5
- பிளம்பர் – 5
- ஸ்னோகிராப்பர் – 20
- வெல்டர் – 125
- COPA – 30
- பிரிஞ்சு, ஏசி கண்டிஸ்னர் மெக்கானிக் – 10
- Moulder – 5
- கார்ப்பெண்டர் – 5
பட்டப்படிப்பு அப்ரண்டிஸ் பயிற்சி
- வணிகம் – 68
- கணினி அறிவியல் – 89
- கணினி பயன்பாடு – 49
- தொழில் நிர்வாகம் – 47
- புவியியல் – 12
- வேதியியல் – 11
- நர்சிங் – 34
- மைக்ரோ பயோலாஜி – 01
வயது வரம்பு: தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.04.2025 தேதியின்படி, 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். 01.04.2007 தேதிக்கு முன்னர் பிறந்தவரா இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
தொழில் பிரிவு இடங்களுக்கு:
- விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ITI-யில் கைவினைஞர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
- NCVT / SCVT வழங்கிய NTC / PNTC சான்றிதழ் (copy) இணைக்கப்பட வேண்டும்.
பட்டப்படிப்பு பிரிவு இடங்களுக்கு: அந்தந்த பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்:
- பி.பார்மசி (B.Pharm)
- பி.காம் (B.Com)
- பி.எஸ்ச் (B.Sc)
- பி.சி.ஏ (BCA)
- நர்சிங் (Nursing)
கல்வி ஆண்டுகள்: 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க அனுமதி.
உதவித்தொகை:
* ஐடிஐ தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,019 உதவித்தொகை.
* பட்டப்படிப்பு தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.12,524 உதவித்தொகை.
* தொழிற்பயிற்சி பெறுபவர்களில் மாதம் ரூ.4,500 உதவித்தொகை.
தேர்வு செய்யப்படும் முறை: என்.எல்.சி நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 12 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
* www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
* ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் இணைக்கவும்.
* NTC / PNTC சான்றிதழ் (ITI), பட்டப்படிப்பு சான்றிதழ், பிற ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
* கையொப்பமிட்ட விண்ணப்பத்தை அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து, அக்டோபர் 27-ம் தேதி மாலை 5 மணிக்குள் NLC இந்தியா அறிவித்த முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி இந்தியா நிறுவனம்,
வட்டம் – 20, நெய்வேலி – 607803.
விண்ணப்பிக்க கடைசி நாள் 21.10.2025.
Read more: ஜிம்மிற்குச் செல்லாமல் வீட்டிலேயே எடையைக் குறைக்கலாம்..! – நிபுணர்கள் சொல்லும் 6 வழிகள் இதோ..