மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டிகிரி படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் டெல்லி போலீஸில் (Delhi Police) சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,073 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விபரம்:
டெல்லி காவல்துறை: ஆண்கள் – 142, பெண்கள் – 70
CAPF: 2,861
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு:
* ஏதேனும் துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
* விண்ணப்பதாரர்கள் 20–25 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்
* ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 3–5 ஆண்டுகள் வரை வயது தளர்வு
தேர்வு முறை:
- கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (CBE)
- உடல் திறன் தேர்வு (PET)
- மருத்துவ பரிசோதனை
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, கரூர், வேலூர், புதுச்சேரி
விண்ணப்பிக்கும் முறை: இந்த மத்திய அரசு பணி வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள், ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in/ என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
கடைசி தேதி: விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 16-10-2025 ஆகும்.
Read more: குழந்தைகள் மரணம்.. இந்தியாவில் உள்ள இந்த 3 இருமல் சிரப்கள் ஆபத்தானவை; WHO எச்சரிக்கை!